பெரியார், காமராஜர் போல அனைவருக்கும் பொதுவானவர் ரஜினி! - ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: பெரியார், காமராஜர் போல அனைவருக்கும் பொதுவான மனிதர் ரஜினிகாைந்த். அதனால்தான் அவர் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தரக் கூடாது என்று சொன்னேன், என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அரசியல் பற்றி ரஜினிகாந்த் எதுவும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், பாஜகவும் காங்கிரசும் திமுகவும் ஆளாளுக்கு அவரை தங்கள் பக்கம் அழைத்து வருகின்றனர்.
அதிமுகவினரோ, ரஜினியின் ஆதரவு தங்களுக்குத்தான் என்று கூறிவருகின்றனர்.

காங்கிரஸிலிருந்து தனியாகப் பிரிந்து போன வாசன், தனது புதிய கட்சிக்குத்தான் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் என்று உரிமையுடன் கோரி வருகிறார்.
இந்த சூழலில்தான், ரஜினி எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தரக்கூடாது. அவர் அரசியலுக்கு வராமலிருப்பதே நல்லது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடியாகப் பேட்டி அளித்தார்.
ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என அவர் கூறியது ஏன்? பாஜகவுக்கு ஆதரவு தந்துவிடுவாரோ என்ற அச்சமா என்று ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, "நிச்சயம் அந்த அடிப்படையில் சொல்லவில்லை. ரஜினி பொதுவான மனிதர். சிறந்த மனிதாபிமானி.
பெரியார், காமராஜர் போன்றவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் ரஜினிகாந்தும் எல்லோருக்கும் பொதுவானவர். அவரது ரசிகர்கள் எல்லா கட்சியிலுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் உள்ளனர். அப்படிப் பார்த்தால் அவர் காங்கிரஸுக்கு ஆதரவு தரவேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் அடிப்படையில் நல்ல மனிதரான ரஜினி, குறுகிய வட்டத்துக்குள் அடைபடக் கூடாது என்பதுதான் என் கருத்து. விரைவில் அவரைச் சந்திக்கவும் உள்ளேன்," என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications