கண்ணா இந்த வீடியோவைப் பாரும்மா.. என்னா ஒரு துள்ளல், என்னா ஒரு உற்சாகம்.. ரஜினிடா!
சென்னை: இங்க யாரோ எனக்கு உடம்பு சரியில்லை அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதாக கூறினார்களே, யார் அது என்று கேட்பதை போல இருந்தது நேற்று இரவு ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியது.
ஆம்.. என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு துள்ளல், சுறுசுறுப்பு ரஜினியிடம். இதை பார்த்தவர்கள் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னதெல்லாம் ஜஸ்ட் ஜோக் என்றுதான் நினைத்திருப்பார்கள்.
கபாலி படப்பிடிப்பை முடித்த நிலையில் ஷங்கரின் 2 ஓ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் ரஜினி. இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு என்று தகவல்கள் வந்தன.

அமெரிக்காவில் ஓய்வு
இதையடுத்து 2ஓ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். அங்கு ரஜினியுடன், அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இருந்து தந்தையைக் கவனித்துக் கொண்டார்.

வைரல்
இந்த நிலையில் அமெரிக்காவில் ரஜினி வாக்கிங் போனது, ஆசிரமத்தில் வழிபட்டது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி வைரல் ஆகின.

யாரு சொன்னா
ரஜினிக்கு உடல் நலம் சரியில்லை என்பதாகவும், அவர் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், அவரை சென்னை விமான நிலையத்தில் பார்த்தவர்கள் தலைவர் டக்கருடோய் என்கிறார்கள்.
தலைவா கோஷம்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்திற்கு வெளியே வந்த ரஜினிகாந்த், தனது காரில் ஏறினார். ரசிகர்கள் தலைவா என்று கோஷமிட்டபடி இருந்தனர். எனவே காருக்குள் சென்று அமர மனமில்லாமல் காரில் நின்றபடியே ரசிகர்களை நோக்கி கையை காண்பித்தார்.

செம சுறுசுறுப்பு
ரஜினி திடீரென காரில் ஏறி நின்றதாகட்டும், கைகளை அசைத்ததாகட்டும், செம சுறுசுறுப்பு. நடையிலும் வழக்கமான வேகம். இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்களுக்கு, ரஜினியின் ஸ்டைலும், இளமையும் மாறாது என்ற படையப்பா டயலாக்தான் நினைவுக்கு வரும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications