தெளிவா பேசியிருக்கிறார் ரஜினி.. இதோ சொல்லிட்டாங்கல்ல தமிழிசை!
நடிகர் ரஜினிகாந்த் குழப்பமில்லாமல் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் குழப்பமில்லாமல் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் படுகோபமாகவும் ஆவேசமாகவும் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்ற ரஜினியின் அழுத்தம் திருத்தமான சென்னை விமான நிலைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தெளிவாக உள்ளது
இந்நிலையில் ரஜினியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினியின் பேச்சு குறித்து அவர் பேசியதாவது, ரஜினிகாந்தின் பேச்சு குழப்பமில்லாமல் மிக தெளிவாக உள்ளது.

பயங்கரவாதிகள் புகுந்ததால்
அனைத்து விஷயங்களிலும் குழப்பமில்லாமல் ரஜினி பேசியுள்ளார். அமைதியாக நடந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால் வன்முறை வெடித்தது. இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

சிபிஎம் எதிர்ப்பு
அதேநேரத்தில் மக்களின் போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்திவிட்டார் என சிபிஎம் கட்சியின் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

அரசியல் களத்தில் அனல்
போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை ரஜினி நியாயப்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார். ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்துள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்!












Click it and Unblock the Notifications