கமல் ரஜினியால் மாற்றம் வராது.. வறட்சிதான் வரும்.. ஜெயக்குமார் பொளேர்!
கமல், ரஜினி எந்த மாற்றத்தையும் தரப்போவதில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: கமல், ரஜினி என யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்றும் அதற்கு பதிலாக வறட்சியைத்தான் கொண்டு வருவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோது நிலையான ஆளுநர் வேண்டும் என்றார் ஸ்டாலின். ஆனால் இன்று நிலையான ஆளுநர் இருந்தும் அவரின் செயல்பாடு சரியல்லை என கூறுகிறார். இது பொறுப்பற்ற பேச்சாக உள்ளது. ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டுத் தான் செயல்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தினமும் மாற்றி மாற்றி கருத்துக்களை சொல்வதே வாடிக்கையாகிவிட்டது.
கமல், ரஜினி என யார் அரசியலுக்கு வந்தாலும் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. மாறாக இருவரும் தமிழகத்தில் வறட்சியைத்தான் கொண்டு வருவார்கள். 2019-ல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலிலும், 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும்.
இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.


Click it and Unblock the Notifications
