ரஜினியும் கமலும் தெருவுக்கு வந்தால் தான் உண்மை நிலை தெரியும்.. துரைமுருகன் அதிரடி!
ரஜினியும் கமலும் தெருவுக்கு வந்தால் தான் உண்மை நிலை தெரியும் என்று துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.
Recommended Video

கோவை : ரஜினியும் கமலும் தெருவுக்கு இறங்கி வந்தால் தான் உண்மை நிலை தெரியும். இப்போது அவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.
மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என்று கோவை விமான நிலையத்தில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் நேற்று கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

காஞ்சி சங்கர மட விளக்கங்கள்
காஞ்சி விஜயேந்திரருக்கு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்திருக்கின்றது எனவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதற்கு காஞ்சி சங்கர மடம் தரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழுக்கு காஞ்சி மட விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான் எனவும் தெரிவித்தார்.

ரஜினி கமல் அரசியல்
நடிகர்கள் கமல்,ரஜினி ஆகியோரின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, சினிமாவை விட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார். மேலும் அவர்கள் நேரடி அரசியலுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு இருக்கும் மரியாதை குறித்து தெரிந்து கொள்ள முடியும் எனவும் இன்னும் அவர்கள் தெருவிற்கு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார். மக்களோடு இணைந்தால் தான் அவர்கள் முழு அரசியல்வாதி ஆக முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக ஒரு மாதிரினான கட்சி
மாணவர்கள்,மக்கள், அரசியல் கட்சிகள் என பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக யார் போராடினாலும் அதை பற்றிய கவலை இந்த அரசுக்கு இல்லை எனவும், எவ்வளவு சுருட்டலாம், கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே அவர்கள் கவனமாக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பா.ஜ.க ஒரு மாதிரியான கட்சி என தெரிவித்த அவர் , அது செயல்படும் நிலையிலேயே இல்லை ஆனால், அவர்கள் பேச்சுக்கு மட்டும் குறையில்லை என்றும் நக்கலாக குறிப்பிட்டார்.

பொம்மலாட்டம் ஆடும் அமைச்சர்கள்
ஜெயலலிதா இருந்தது வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அமைச்சர்களுக்கு தற்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு நடந்து கொள்கிறார்கள். டெல்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு பொம்மலாட்டம் ஆடி வருகிறார்கள். இது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை. சூழ்நிலைகள் மாறும். திமுகவிற்கு தலைமையேற்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications