ரஜினி மன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள்... அதிர்ச்சியில் சேலம் திமுக
ரஜினி மன்றத்தில் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் சேலம் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தில் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது சேலம் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகரிடம் இருந்து சேலம் மாவட்ட பொறுப்பாளர்களுக்குக் கடிதம் ஒன்று சென்றுள்ளது. அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலோடு நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர் என்ற குறிப்புடன் தொடங்குகிறது அந்தக் கடிதம்.
அதில், கடந்த 14.3.2018 புதன்கிழமை அன்று நடைபெற்ற சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆலோசனைக் கூட்ட முடிவில், சேலம் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை அறிவிக்கிறோம். இவர்களுக்கு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

வீரபாண்டி ராஜா
அவர் வெளியிட்டிருந்த பட்டியலில், தி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள் இருந்ததுதான் ஹைலைட். இதுபற்றி நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட தி.மு.க பிரமுகர் ஒருவர், " சேலம் மாவட்டத்தையே தனது விரல் அசைவில் வைத்திருந்தார் தி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அவருடைய மகன் ராஜா, தற்போது சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருக்கிறார்.

திமுகவிடம் விருந்து விலகிய உறவுகள்
உடல்நலக் குறைவு காரணமாக 2012-ம் ஆண்டு இறந்தார் வீரபாண்டி ஆறுமுகம். அதன்பிறகு, தி.மு.க மீதான அவரது குடும்ப உறவுகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

வீரபாண்டி ஆறுமுகம் உறவினர்
தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளராக நீலா ஜெயக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். வீரபாண்டி ராஜாவின் நெருங்கிய சம்பந்தி இவர். ராஜாவின் இரண்டாவது மகளுக்கு இவரது குடும்பத்தில் இருந்துதான் மாப்பிள்ளை எடுத்துள்ளனனர்.

ராஜாவின் சம்பந்தி
அதேபோல், ராஜாவின் முதல் மகளின் மாமனார் இளவரசன், கடலூர் மாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் சம்பந்தம் செய்த இரண்டு சம்பந்திகளும் ரஜினி மன்றத்தை நாடிப் போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. வீரபாண்டியார் இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என ஆதங்கப்படுகின்றனர் சேலம் திமுகவினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications