ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு.. ரஜினி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சுவாமி தயானந்த சரஸ்வதியை தன் ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் சென்னைக்கு வந்தாலும், அல்லது கோவை ஆனைகட்டி ஆசிரமத்திலேயே இருந்தாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் அவரைச் சந்திக்கத் தவறியதில்லை.

Rajini's condolence for Swami Dayanandha Saraswathy

அண்மையில் சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ரஜினி.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஆனைக்கட்டி ஆசிரமத்துக்கே சென்ற ரஜினி, அங்கு சில தினங்கள் தங்கி சுவாமிகளின் உரையைக் கேட்டார். அப்போது, ரஜினிக்காக அங்கே தனிக் குடிலே உருவாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

சுவாமிகள் மறைவுச் செய்தி அறிந்த ரஜினி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், "பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளே, எங்களை ஆசீர்வதியுங்கள். தங்களை பிரிவது வேதனையாக உள்ளது. தங்கள் பாதங்களில் எங்கள் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கிறோம்.. எப்போதும் எங்களுடன் இருங்கள்," என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+