For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலுக்கு வருவது ஏன்?.. ரஜினி சொன்ன விளக்கம்!

தான் அரசியல் கட்சி தொடங்குவது ஏன் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலுக்கு வருவது உறுதி... ரஜினியின் பரபரப்பு பேச்சு

    சென்னை: தான் அரசியல் கட்சி தொடங்குவது ஏன் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்து இருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கெட்டு போய்விட்டது என்று அவர் கூறியுள்ளார்.

    ராகவேந்திரா மண்டபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அதில் தனி கட்சி ஆரமித்து வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட போவதாக ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார்.

    Rajini says why he came into politics

    இந்த நிலையில் தான் ஏன் அரசியலுக்கு வர போகிறேன் என்றும் அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் மிகவும் கெட்டுப்போய் விட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மேலும் ''கடந்த ஒருவருடம் மட்டும் தமிழ்நாட்டு அரசியலில் நிறைய மோசமான விஷயங்கள் நடந்து இருக்கிறது. எல்லா மாநிலங்களில் உள்ள மக்களும் தமிழ்நாட்டு அரசியலை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.

    அதேபோல் ''தமிழ்நாட்டின் ஜனநாயகம் சீர் கெட்டு போய்விட்டது. ஜனநாயகம் என்ற பெயரில் கட்சிகள் சொந்த நாட்டு மக்களிடம் கொள்ளையடிக்கின்றனர். இது மிகவும் மோசமான விஷயம்'' என்றார்.

    மேலும் ''எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நான் அரசியலுக்குள் வராவிட்டால் அதேபெரிய தவறாக மாறிவிடும்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Rajini explains why he came into politics. He said, politics has changed a lot and he came to clean the politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X