"ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது" - ஈவிகேஎஸ் இளங்கோவன் பொளேர் !
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதை நண்பராக வேண்டுகோள் வைப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவரா வரமாட்டார என்ற கேள்வி தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அப்படி ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது வேறு எதாவது கட்சியுடன் கூட்டணி அமைப்பார என பல்வேறு சர்ச்சைகள் பரவி வருகின்றன.

ஒருபுறம் ரஜினியின் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் எனக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பம். அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசியலுக்கு வர அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்தால் மிகப் பெரிய மாற்றம் வருமா, வராதா என்று சொல்ல முடியவில்லை.
தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமென்றால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்பதை நண்பராக இந்த வேண்டுகோளாக வைக்கிறேன். ஏனென்றால், தமிழகத்தில் எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கும் ரஜினி பொதுவானவராக உள்ளார். அவர் அரசியல் என்ற சிறு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக்கொள்ளக் கூடாது என்றார்.
-
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!











Click it and Unblock the Notifications