ரஜினி வழி தனி வழி என்றால்.. என் வழி எம்ஜிஆர் வழி என்கிறாரா கமல்!

நடிகர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்துக்கு நாளை நமதே என பெயர் வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஜயேந்திரருக்கு கமல் சுளீர்!- வீடியோ

    சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்துக்கு நாளை நமதே என பெயர் வைத்துள்ளார்.

    மத்திய மற்றும் மாநில அரசுகளை டிவிட்டரில் கடுமையாக சாடி வந்த நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இதற்கான பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அன்று தனது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கமல் அறிவித்துள்ளார். இதேபோல் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்

    எதிர்ப்பும் வரவேற்பும்

    எதிர்ப்பும் வரவேற்பும்

    வரும் சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்தார். ஆனால் நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கும் அரசியல் கட்சி தொடங்குவதற்கும் எதிர்ப்பும் வரவேற்பும் ஒருங்கே எழுந்துள்ளது.

    என் வழி தனி வழி

    என் வழி தனி வழி

    இருப்பினும் அதையெல்லாம் சட்டைசெய்யாத ரஜினியும் கமலும் தங்களின் காரியத்தில் தீவிரமாக உள்ளனர். நடிகர் ரஜனிகாந்த் யாரையும் விமர்சிக்காமல் மற்றவர்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் அரசியல் செய்ய உள்ளார். அதாவது அவர் படங்களில் பேசியுள்ள என் வழி தனி வழி என்ற டயலாக் அடிப்படையில்.

    கமல் வழி எம்ஜிஆர் வழி

    கமல் வழி எம்ஜிஆர் வழி

    ஆனால் கமல்ஹாசனோ தனது வழி எம்ஜிஆர் வழி என தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நடிகர் கமல் தனது பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என பெயர் வைத்துள்ளார்.

    எம்ஜிஆருக்கு இருந்தது

    எம்ஜிஆருக்கு இருந்தது

    இதுகுறித்து பேசிய அவர் யோசிக்காமலே நாளை நமதே என பெயர் வைத்ததாக கூறியுள்ளார். எம்ஜிஆர் படப்பெயராக இருக்கிறதே என்று கேட்கிறார்கள் என்ற கமல் இருக்கட்டும் 'நாளை நமதே' என்ற எண்ணம் எம்ஜிஆருக்கு இருந்தது என்றார்.

    அந்த எண்ணம் எனக்கும்..

    அந்த எண்ணம் எனக்கும்..

    இந்தப் பெயரைச் சொல்லும் போது நல்ல நினைவுகள் தான் வருகிறது என்ற அவர் அதனால்தான் நாளை நமதே என பெயர் வைத்தேன் என்று கூறினார். அந்த எண்ணம் தனக்கும் உண்டு என்றும் அவர் கூறினார்.

    வரியில்லா ஆட்சி

    வரியில்லா ஆட்சி

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சி பொற்கால ஆட்சி என்றும் மக்களின் ஆட்சி என்றும் கூறப்படுவதுண்டு. ஏழை எளிய மக்களுக்காக ஆட்சிபுரிந்த எம்ஜிஆர் மக்கள் மீது வரி உள்ளிட்ட எந்த சுமையையும் சுமத்தவில்லை. இந்நிலையில் தனது பயணத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைத்திரக்கிறார்

    எம்ஜிஆர் வழியிலும்

    எம்ஜிஆர் வழியிலும்

    ஆக ரஜினி தனது தனி வழியிலும் கமல்ஹாசன் எம்ஜிஆர் வழியிலும் செயல்படவுள்ளனர். மக்கள் எந்த வழிக்கு ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+