ரஜினியின் 'போர் பிரகடனம்' எப்போது? அடுத்த ரசிகர்கள் சந்திப்பில் அறிவிப்பு?
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் அடுத்த கட்டமாக நடத்தப்படும் சந்திப்புகளில் போர் பிரகடனத்தை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுடனான அடுத்த கட்ட சந்திப்பின்போது போர் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் ரஜினி காந்த் ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் அவர் அரசியல் குறித்து பேசிய பேச்சுகளால் அரங்கம் முழுவதும் கரகோஷத்தாலும், விசில் சப்தத்தாலும் நிரம்பியது. முதல் நாள் பேசியதில் சாதாரணமாக பேசிய ரஜினிகாந்த், 5-ஆம் நாள் சந்திப்பின் போது மிகவும் வலிமையாக ஆனால் தனக்கே உரிய பாணியில் பேசினார்.

ஆண்டவனின் கருவி நான்
ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், நான் ஆண்டவனின் கருவி. இன்று நான் நடிகனாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அதேபோல் நாளை நான் என்னாவாக வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிப்பார்.

முரட்டு தைரியம் கூடாது
ரஜினிகாந்துக்கு பயம், தயக்கம் ஆகவே அவர் ஒவ்வொரு முடிவையும் எடுப்பதில் அதிகமாக யோசிக்கிறார் என்கிறார்கள். ஆற்று நீரில் காலை வைக்கும்போது முதலைகள் உள்ளது தெரிகிறது. அப்போது போய், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்ற முரட்டு தைரியம் கூடவே கூடாது என்றார். இந்த பேச்சிலிருந்து ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பினர்.

போருக்கு தயாராகுங்கள்
இந்நிலையில் கடந்த 5-ஆம் நாள் ,அதாவது வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்போது ரஜினி பேசுகையில், தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுவிட்டது. போர் வரும் போது பார்த்து கொள்ளலாம். ஆண்டவன் இருக்கான் என்றார்.

அடுத்த கட்ட சந்திப்பு
மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் கடந்த 5 மாவட்டங்கள் சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். மீதமுள்ள 17 மாவட்ட ரசிகர்களை சந்திப்பதற்காக அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும் சென்னை மாவட்டம் பெரியது என்பதால் அம்மாவட்ட ரசிகர்களை கடைசியாக சந்திப்பார் என்றும் அவர்களுக்கு மட்டும் ஒரு வாரம் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போருக்கு தயாராகுங்கள் என்று கூறிய ரஜினி இந்த கட்ட சந்திப்புகளின்போது போருக்கான பிரகடனத்தை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications