புயலால் சீரழிந்த ஆந்திராவுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார் ரஜினிகாந்த்!
சென்னை: மூன்று மாதங்களுக்கு முன்பு ஹூட் ஹூட் புயலால் சீர்குலைந்த ஆந்திராவுக்கு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தெலுங்கானாவுக்கு பிரித்து கொடுத்தது போக புதிதாக உருவான ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அரசு அமைந்த சில மாதங்களிலேயே அங்கு ஹுட்ஹுட் புயல் கோரத்தாண்டவம் ஆடியது.

இந்த புயலால் பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டது. உயிர்கள் பல பலியாகின. விசாகபட்டிணம் நகரமே முற்றிலும் உருகுலைந்தது. மீட்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டன.

இதைத்தொடர்ந்து, ஆந்திர அரசுக்கு உதவுவதற்காக, தெலுங்கு திரையுலகினர், நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தினர். தெலுங்கு திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்கள் அதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், தமிழ் நடிகர் ரஜினிகாந்த்தும், ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். பொதுமக்கள் நிவாரண நிதியாக ஶ்ரீராகவேந்திரா பப்ளில் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஐந்து லட்சம் (டிடி) ஆந்திர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications