ரசிகர்களுடன் நாளை ரஜினிகாந்த் சந்திப்பு... "தலைவர்" என்ன சொல்ல போகிறார்?
ரஜினிகாந்த் நாளை ரசிகர்களை சந்திக்கிறார். அப்போது அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
சென்னை: ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்குவார் என்ற அறிவிப்பை நாளை ரசிகர்களுடனான சந்திப்பில் அவர் வெளியிடவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வருமாறு பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர் போருக்கு தயாராக இருக்குமாறு ரசிகர்களை அறிவுறுத்தினார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். போர் புரிய எப்போது அழைப்பார் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினி தனது பிறந்தநாள் அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அவர் அறிவிக்கவில்லை. இதையடுத்து நாளை முதல் இந்த மாதம் 31-ஆம் தேதி வரை ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். மேலும் நாளை செய்தியாளர்கள் சந்திப்பும் கூட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நாளை ரஜினி எப்போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்ற தேதியை நிச்சயம் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் அவர் தனது அரசியல் கட்சியை வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி தொடங்குவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படியோ இந்த மாதம் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத மாதமாகவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications