'லிங்கா'வை முடித்து விட்டு பாஜகவில் சேரப் போகிறாராமே ரஜினி?
Subscribe to Oneindia Tamil

வழக்கம் போல இதுவும் வதந்தியாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. ஆனால் ரஜினியை இழுக்க பாஜக தரப்பு தீவிரமாக முயன்று வருவதாக செய்திகள் வெளியாகி வருவதால், இது உண்மையாக இருக்குமோ என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.
ரஜினியை இழுக்க அமீத் ஷா முதல் தமிழிசை செளந்தரராஜன் வரை பலரும் பல வழிகளில் முயன்று கொண்டுள்ளனர். இதுதொடர்பாக இதுவரை ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்காமல் உள்ளார்.
தற்போது லிங்கா படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் பாஜகவின் முயற்சிக்குப் பலன் கிடைத்து விட்டது என்றும் அவர் பாஜகவில் இணைய முடிவு செய்து விட்டார் என்றும் ஒரு செய்தியை உலவ விட்டுள்ளனர்.
லிங்கா படத்தை முடித்த பின்னர் அவர் பாஜகவில் சேருவார் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
பொறுத்திருந்து பார்க்கலாம்...!












Click it and Unblock the Notifications