கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி.. அரசியல் பிரவேச அறிவிப்பு வருமா?
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31 வரை ரசிகர்களை சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை தனது இரண்டாவது கட்டமாக சந்திக்கப் போகிறார். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கப் போகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது பற்றிய விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் 1996ஆம் ஆண்டில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசியது எதிர்பார்ப்பை மேலும் வலுவாக்கியது. போர் வரட்டும் என்று கூறி ரசிகர்களை உசுப்பேற்றினார் நடிகர் ரஜினி.

ரஜினியின் அரசியல் வருகை
ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்.

போருக்கு தயாராகுங்கள்
நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள் என்றெல்லாம் பேசி அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தினார். ரஜினிகாந்தின் பேச்சு அரசியலுக்கு வருவதை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கணிப்புகள் வந்தன.

சினிமாவில் ரஜினி
இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்பிறகு 2.0, காலா படங்களில் அவர் பிஸியாகி விட்டார். தற்போது அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.
ரஜினி மீண்டும் சந்திப்பு
நடிகர் ரஜினி தனது அரசியல் வருகையை டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்தநாளில் சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை. இந்த நிலையில் வரும் 26 முதல் 31 ஆம் தேதி வரை ரசிகர்களை இரண்டாம் கட்டமாக சந்திக்கப் போகிறார். காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை தினசரி 1000 பேரை சந்திக்கிறார் நடிகர் ரஜினி. இப்போதாவது தனது அரசியல் வருகையை அவர் அறிவிப்பாரா பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications