புத்தாண்டில் ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொன்ன ரஜினி!
புத்தாண்டு தினமான இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார் ரஜினிகாந்த்.
விசேஷ நாட்கள், ரஜினியின் பிறந்த நாள் அன்று மட்டுமல்ல, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் ரஜினி வீட்டு முன் ரசிகர்கள் திரண்டு போய் வாழ்த்துச் சொல்வது வழக்கம்.
இது போன்ற விசேஷ நாட்களில் ரஜினி வீட்டிலிருந்தால், ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி அனுப்புவது வழக்கம். அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் அவர் சார்பில் லதா ரஜினி வாழ்த்துகள் சொல்லி, இனிப்புக் கொடுத்து அனுப்புவார். புத்தாண்டு தினமான இன்று ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் திரண்டனர்.

ரசிகர்கள் வந்திருக்கும் செய்தியை அறிந்ததும், அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூற விரும்பிய ரஜினி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார். அவர்களை ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளியில் வந்தார் ரஜினி. அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்துக்களைக் கூற, ரஜினியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கைகளைக் கூப்பியபடி ரஜினி சில நிமிடங்கள் நின்று விட்டு பின்னர் வீட்டுக்குள் சென்றார். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாவும் உற்சாகமாகவும் அமைந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications