ஜெ.வின் பெருங்கோபத்தில் இருந்த ரஜினியை தாங்கி பிடித்தது 'திமுக முதலைகள்தான்!
இன்று திமுகவை முதலைகள் என விமர்சிக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் 1990களில் ஜெயலலிதாவின் கோபத்தில் இருந்து ரஜினிக்கு முழு ஆதரவு தந்ததே திமுகதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சென்னை: 1990களில் ஜெயலலிதாவின் உக்கிரமான பெருங்கோபத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்தை தாங்கி பிடித்ததே இன்று அவர் விமர்சிக்கும் 'திமுக முதலைகள்தான்' என்பதை மறந்துவிட்டதாகவே தெரிகிறது.
1980களின் தொடக்கத்தில் ஆர்.எம். வீரப்பனுடன் நட்பு.. நெருக்கம்... இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என ஊடகங்கள் பற்ற வைத்தன. அன்று வைக்கப்பட்ட தீ இந்த 'நூற்றாண்டிலும்' தொடருகிறது என்பதுதான் சோகம்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பற்றி படுபயங்கரமான குழப்பத்தை உருவாக்கி வருகிறவர் ரஜினி. குறிப்பாக ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போது அவர் காட்டும் பிலிம் ரோல்கள் அனைத்தும் 'அந்துபோச்சு' ரகம்தான்.

பாட்ஷா ரஜினி
1990களில் ஜெயலலிதாவின் ஆட்சியை எதிர்த்து பேசினார் 'பாட்ஷா' ரஜினிகாந்த். இதனால் ரஜினி மீது கடும் கோபத்தில் இருந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

அன்று தாங்கிய திமுக
ஆனால் ரஜினிக்கு அன்று பாதுகாப்பாக நின்று குரல் கொடுத்தது திமுக. இதனால்தான் மூப்பனார் தமாகாவை தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைத்தபோது 'அதற்கு வாய்ஸ்' கொடுத்தார் ரஜினிகாந்த். அன்றைய மக்களின் மனநிலையும் அப்படித்தான் இருந்தது. அதனால் அது ஒர்க் அவுட் ஆனது.

வாய்ஸ் எடுபடலையே
அதற்குப் பின்னர் ரஜினிகாந்தும் பலமுறை வாய்ஸ் கொடுத்து பார்த்தார்... தமிழக மக்கள்தான் காது கொடுக்கு கேட்கவே தயாராக இல்லை. தற்போது தமிழக அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

பாஜகவின் வாய்ஸ் ரஜினி
இந்த குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அலையாய் அலைகிறது டெல்லி. இதற்காகவே களமிறக்கப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த் நாடறிந்த பேருண்மை. இந்த விசுவாசத்துக்காகவே அன்று தம்மை தாங்கிய திமுகவை 'முதலைகள்' என டெல்லி எஜமானர்களின் ஸ்கிரிப்படி பேசியிருக்கிறார் ரஜினிகாந்த் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications