சன் பிக்சர்ஸில் புதிய படம்.. அடுத்தடுத்து புக் ஆகும் ரஜினி..அப்ப அரசியல் அவ்ளோதானா?
சினிமாவில் தொடர்ந்து பிசியாவதால் ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு வருவதால் அரசியல் கட்சி தொடங்குவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சிஸ்டமே சரியில்லை... போருக்கு காத்திருங்கள்... அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார் ரஜினிகாந்த். அதேபோல் கொள்கை என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க தலையே கிறுகிறுக்க வைத்துவிட்டது என பேசி தலைப்புச் செய்தியுமானார் ரஜினி.
ரஜினி மக்கள் மன்றத்தை உருவாக்கி 'ஆட்சேர்ப்பு மையங்கள்' நடத்தப்பட்டும் வருகின்றன. இந்த மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக லைக்கா முன்னாள் அதிகாரி ராஜூ மகாலிங்கத்தை நியமித்தார் ரஜினி.
|
சன் குழுமம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இப்போது ஒவ்வொரு மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸில் உரையாடி வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக சன் குழுமம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இழுத்தடிக்கும் ரஜினி
கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வருகிறேன் என கூறிய கையோடு கட்சியை தொடங்கியும் விட்டார். ஆனால் அரசியலுக்கு வருவேன் என 30 ஆண்டுகாலமாக கூறி வரும் ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

எப்பதான் கட்சியாம்?
டிசம்பர் மாதமே கட்சி பெயரை ரஜினி அறிவிக்கிறார் என கூறப்பட்டது. அப்புறம் பொங்கல் நாளில் என்றார்கள்.. ஏப்ரல் மாதம் எனவும் அடுத்தடுத்து காலம் கடத்தப்பட்டு வருகிறது. இப்போது சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கட்சி தொடக்கம் இல்லை?
கட்சி தொடங்குகிறேன்.. தொடங்குகிறேன் என கூறிக் கொண்டே அடுத்தடுத்த படங்களில் ரஜினிகாந்த் பிசியாகவே இருக்கிறார். அதனால் கட்சி தொடங்குவது இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications