காலா படத்தால் ஒரே நாளில் உலக ஃபேமசான நாய்.. 2 கோடி ரூபாய் வரை டிமாண்ட்
Recommended Video

சென்னை: காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் நாய்க்கு செம மவுசாம். ரூ.2 கோடி வரை கொடுத்து வாங்க பணக்காரர்கள் சிலர் தயாராக உள்ளனராம்.
ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் அவருடன் நடிக்கும் கேரக்டர்களும் இயல்பாகவே புகழ் பெற்றுவிடும். பாட்ஷாவில் ரகுவரன், படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன், சந்திரமுகியில் பிரபு, ஜோதிகா, கபாலி திரைப்படத்தில் பல சிறு கேரக்டர்கள் என புகழ்பெற்றனர்.
இதேபோல காலா திரைப்படத்திலும், நானே பட்கர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி போன்றோரும் நல்ல பெயரை ஈட்டியுள்ளனர். ஆனால் அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவர்தான் மிஸ்டர் 'மணி'.

மணி நாய்
ரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் நாய் பெயர்தான் மணி. கதைக்கு தேவை என்பதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்களை பார்வையிட்டு, அதில் மணிதான், நேட்டிவிட்டியோடு இருப்பதாக கூறி தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். மணியின் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் இந்த நாய் பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரஜினிக்கு நெருக்கம்
சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்துடன் ஈஸியாக பழகி வந்ததாம் மணி. இதனால் சைமனுக்கு வேலை எளிதாகிவிட்டது. முதல் நாள் ரஜினி, அந்த நாய்க்கு பிஸ்கெட் கொடுத்துள்ளார். இதன்பிறகு, ரஜினியுடன் மிகுந்த பாசம் காட்ட ஆரம்பித்துவிட்டது மணி. ரஜினிகாந்த் வரும்போது, கேரவன் அருகே சென்று காத்திருக்கும் மணி, அவரை பார்த்து கொஞ்சி குலாவும் என்கிறார் சைமன்.

ரூ.2 கோடி விலை
இப்போது, இந்த நாய்க்கு பயங்கர மவுசு. மணியை ரூ.2 கோடிக்கு விலை பேசுகிறார்களாம் சில பணக்காரர்கள். ஆனால், தான் ஒரு பிள்ளையை போல வளர்ப்பதாக சைமன் கூறிவிட்டார். இப்போது பல சீரியல்களில் நடிக்க மணிக்கு வாய்ப்பு வந்துள்ளதாம். எனவே சைமன் ரொம்பவே பிஸியாகிவிட்டார்.

சிறந்த வளர்ப்பு
தெருவில் இருந்து கண்டெடுத்த இந்த நாய், நாட்டு நாய் வகையை சேர்ந்ததுதான். ஆரம்பத்தில் எல்லோரையும் கடித்துக்கொண்டிருந்த இந்த நாயை நன்கு பயிற்சி கொடுத்து, இப்போது பாசமுள்ள நாயாக மாற்றியுள்ளார், சைமன் கிறிஸ்டோபர். ரஜினியிடம் இந்த நாயைக் காட்டியதும், இவன் பண்ணிடுவானா எனக் கேட்டாராம். பண்ணிடுவான் எனச் சொன்னதும் ஓகே சொல்லிட்டாராம். ரஜினிக்கு இந்த நாயை மிகவும் பிடிக்கும் என பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications