எதிர்பார்க்கவே இல்லையாம்.. அரசியலை விட்டே கமல் ஓடிவிடுவார் என்று நினைத்தாரா ரஜினி?
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அரசியல் அறிவிப்பை முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதைக் கேட்ட மக்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி.
எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் 2ம் பாகமாக தயாராகிறது, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.
இது அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இப்பட துவக்க விழாவில் இன்று ரஜினியும், கமலும் ஒன்றாக பங்கேற்றனர். இருவரும் கை குலுக்கிக் கொண்டனர். இரு நடிகர்களுமே, அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்த நிலையிலும், ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது முக்கியத்துவம் பெற்றது.

முன்கூட்டியே எதிர்பார்த்தீர்களா
இந்த நிலையில், நிருபர்களின் கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார். அப்போது கமல் கட்சி துவங்வதாக அறிவித்துள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த். அப்போது நிருபர்கள் அவரிடம், கமலின் அரசியல் அறிவிப்பை முன்கூட்டியே எதிர்பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

ஆச்சரியம், அதிர்ச்சி
இதற்கு, ரஜினி அளித்த பதில்தான் ஆச்சரியமானது. கமல் அறிவிப்பு வெளியிடுவார் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை, அவருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். அதாவது, கமல் அறிவிப்பு பற்றி தனக்கு எந்த தகவலும் முன்கூட்டியே தெரியாது என அவர் கூறியுள்ளார்.

கமல் சீனியர்
இதில் கவனிக்க வேண்டியது, ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி கடந்த டிசம்பர் 31ம் தேதிதான் அறிவித்திருந்தார். ஆனால் கமல் அதற்கு சில மாதங்கள் முன்பே தேசிய ஊடகங்கள் வாயிலாக அதை பகிரங்கமாகவே அறிவித்தார். மேலும் விசில் என்ற ஆப் மூலம், ஊழலுக்கு எதிரான இயக்கத்தையும் அறிவித்தார். ஆனால், கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், தான் பிப்ரவரி மாதம் முதல் தீவிர சுற்றுப் பயணத்தில் இறங்க உள்ளதாக கூறியிருந்தார். இதைத்தான் ரஜினி எதிர்பார்க்கவில்லை என்கிறார் போலும்.

இப்படி நினைத்திருப்பாரோ
நெட்டிசன் ஒருவர் எனவேதான் ரஜினியின் இந்த அதிர்ச்சியை இப்படி கேலி செய்கிறார்: "அறிவிப்பு வெளியிடாமல் இவரை போலவே இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என 20 வருடம் காக்க வைப்பார் என நினைத்துவிட்டார் போல" என்கிறார் அந்த நெட்டிசன். ரஜினியின் இந்த அதிர்ச்சி ஏன் என்பதுதான் புரியவில்லை. "ஒருவேளை தான், அரசியலுக்கு வருவதாக அறிவித்தும், கமல் தனது அரசியல் முடிவை கைவிட்டுவிடுவார் என ரஜினி நினைத்துவிட்டார் போலும்" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

கமல் தெளிவா சொல்லிட்டாரே
ஆனால் கமல்ஹாசன் வெகு நாட்கள் முன்பே, ரஜினிகாந்தும், நானும் ஆரோக்கிய அரசியல் செய்வோம் என தெரிவித்திருந்தார். ரஜினியின் அரசியல் வருகை அவர் அறிவிக்கும் முன்பே கமலுக்கு தெரிந்திருந்தது என்பதற்கு அந்த கருத்து ஒரு உதாரணம். ஆனால் ரஜினிகாந்த்தோ, கமல் ஏற்கனவே அறிவித்த அரசியல் வருகையை, இப்போது அறிக்கையாக சொல்லும்போதில்கூட, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். இருவரது கருத்துக்களும் முரண்படுவது புரியாத புதிர்தான்.
-
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications