சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை!
சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா இரண்டு நாட்கள் முன் சென்னையில் நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்கள், பல்வேறு பாஜகவினர், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ரஜினி, பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.

பெரிய சர்ச்சை
பெரியார் குறித்து ரஜினி பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கள் சில தவறானது ஆகும். வரலாற்று ரீதியாக தவறாக சில தகவல்களை ரஜினி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பலரும் உண்மைகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

பெரியார் எப்படி
இந்த நிலையில் பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பெரியார் குறித்து ரஜினி பேசியது தவறு. அவர் பேசிய விஷயங்கள் நிறைய தவறானது. திரிக்கப்பட்டது. வரலாற்று விஷயங்களை படிக்காமல் ரஜினி பேசி இருக்கிறார்.

அவதூறு
பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும். சமூகநீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டம் புரியும். பெரியாரை ரஜினி படித்து புரிந்து கொள்ள வேண்டும். அதன்பின் பேச வேண்டும்.

ரஜினி எப்படி
ரஜினியை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். சங்பரிவார் சொல்வதை ரஜினி பேசுகிறார். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications