For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜிவ் வழக்கில் தண்டனை பெற்றோரை விடுவிக்கக் கூடாது என நினைப்போர் முட்டாள்கள்: ஜெத்மலானி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றோரை விடுவிக்கக் கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் மத்தியில் இருக்கின்றனர் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சாடியுள்ளார்.

ராஜிவ்காந்தி வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் ஜெத்மலானி. மூன்று தமிழரின் தூக்கு ரத்தானபோது ஜெத்மலானிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெத்மலானி இன்று சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வைகோ தலைமையில் உற்சாகர வரவேற்பு அளிக்கப்பட்டது.

Ram Jethmalani on SC stay on Rajiv assassins

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெத்மலானி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றோர் விடுவிக்கப்படக் கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் மத்தியில் இருக்கின்றனர்.

ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் போதுமான தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டனர். இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவும் மேற்கொண்ட அணுகுமுறையும் சரியானதே.

உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதனால் அவர்கள் விடுதலையில் தாமதமாகலாமே தவிர அவர்கள் விடுதலையாவதில் எந்த ஒரு சிக்கலுமே இல்லை என்றார்.

English summary
Senior counsel Ram Jethmalani said, Rajiv assassins have suffered enough, fools in Centre who think they shouldn't be released: SC stay on Rajiv Gandhi's assassins on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X