ராம மோகன ராவை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கும் தமிழக அரசு.. சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?
ராம மோகன ராவை காத்திருப்போர் பட்டியலில் தமிழக அரசு வைத்துள்ளதே தவிர சஸ்பெண்ட் செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஐடி ரெய்டுக்கு உள்ளான முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன.
தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் விவேக் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி பணம், தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளது.

ரெய்டு நடந்து ஒருநாள் கழித்த பிறகு, நேற்று மதியம்தான், ராம மோகன ராவ் தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி, கிரிஜா வைத்தியநாதன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
ஆனால், இதுவரை ராம மோகன் ராவ் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டுமானால் ஐடி துறை ரிப்போர்ட் தாக்கல் செய்ய வேண்டும், பிறகு விசாரணை அமைப்பு ஒன்று விசாரணை நடத்தி குற்றத்திற்கான அடிப்படை ஆதாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதனிடையே, ராம மோகன ராவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாமக இளைஞர் பிரிவு தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications