ராமச்சந்திர ஆதித்தன் உடல் காயாமொழியில் நாளை அடக்கம்!

Subscribe to Oneindia Tamil

Ramachandra Adithan's body to cremate his native village Kayamozhi
சென்னை: நேற்று சென்னையில் காலமான மாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தனின் உடல் அவரது சொந்த ஊரான காயாமொழிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை காலை அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

சிபா ஆதித்தனாரின் மூத்த மகன் பா ராமச்சந்திர ஆதித்தன் நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இன்றும் ஏராளமான அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், அவரது நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி அருகில் உள்ள காயாமொழிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் காயாமொழிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

உடன் அவரது மகன்கள் கண்ணன் ஆதித்தன் மற்றும் கதிரேசன் ஆதித்தன், உறவினர்கள், நாடார் சங்க பிரமுகர்கள் செல்கிறார்கள்.

நாளை வெள்ளிக்கிழமை காலை காயாமொழியில் ராமச்சந்திர ஆதித்தன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+