மோடி ஆட்சியிலும் மீனவர்கள் கைது தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது... ராமதாஸ் வேதனை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 29 பேரை சிங்களப் படையினர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர். அதன்பின் நேற்றுக் காலை மேலும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் இந்த அடாவடிச் செயல் கண்டிக்கத்தக்கது. வங்கக்கடலில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிந்ததையடுத்து 45 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை தான் இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
ஒன்றரை மாதங்களாக வருமானமின்றித் தவித்த மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடலுக்குச் சென்ற நிலையில், அவர்களை கைது செய்திருப்பது மனித நேயமற்ற செயலாகும். அதுவும் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். இத்தகைய செயலை இனியும் அனுமதிக்கக்கூடாது.
வங்கக் கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும், தாக்குவதும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கின்றன. இதுவரை 600க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் தாக்கப் பட்டுள்ளனர். எனினும் அதற்கு காரணமானோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்னர் மீனவர்கள் மீதான சிங்களப்படையினரின் அத்துமீறல் ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நரேந்திரமோடி அரசு பதவி ஏற்பதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஒருபுறம் அறிவித்துவிட்டு, அவர்களில் ஒருவர் கூட இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் மேலும் 33 மீனவர்களை சட்டவிரோதமாக கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசு இன்னும் திருந்தவில்லை; தொடர்ந்து நாடகமாடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இலங்கை அரசின் இடையூறுகளாலும், அத்துமீறல்களாலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு தான் தங்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறார்கள். இலங்கை அரசின் இந்தப் போக்கு தொடர அனுமதிக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
எனவே, கைது செய்யப்பட்ட 33 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
பயிர் கடன் ரத்துக்கு வரவேற்பு.. முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ் -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications