காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அத்தனை பெரிய கடினமான செயலா?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அத்தனை பெரிய கடினமான செயலா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருப்பது வேதனை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று கட்கரி கூறியிருப்பது அவரது கடமையை தட்டிக்கழிக்கும் செயலாகும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க முடியாது என்பதற்காக அமைச்சர் கூறும் எந்த காரணங்களையும் ஏற்க முடியாது. மேலாண்மை வாரியம் அமைப்பது அமைச்சர் கூறுவது போன்று அவ்வளவு கடினமான பணி அல்ல.
மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள் என்னென்ன? என்பதை நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. சுருக்கமாகக் கூறினால் பக்ரா- பியாஸ் வாரியத்தின் நகலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் வலியுறுத்துவதற்காக, இனியும் காத்திருக்காமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு உடனடியாக டெல்லி செல்ல வேண்டும்.
அங்கு பிரதமரிடம் வலியுறுத்துவதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைக்காமல், அங்கேயே முகாமிட்டு அனைத்து அறப்போராட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு தான் தமிழகம் திரும்ப வேண்டும். இந்த முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications