ஆளை வெட்டுவர்.. அதையும் மீறி பிழைத்தால் அதற்கு தாங்களே காரணம் என்பர்.. ஸ்டாலினை விளாசும் ராமதாஸ்
மீத்தேன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த உத்தரவை திமுகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என கூறிய ஸ்டாலினை கிண்டல் செய்துள்ளார் ராமதாஸ்.
சென்னை: மீத்தேன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அதற்கு திமுக காரணம் என கூறிய ஸ்டாலினை கேலி செய்துள்ளார்.
ராமதாஸ் டிவிட்டரில் அவ்வப்போது ஆக்டிவாக இருப்பது வழக்கம். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் நேற்று கூறிய நிலையில், இன்று டிவிட்டரில் ராமதாஸ் வெளியிட்ட சில டிவிட்டுகளை பாருங்கள்.
*காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டம் ரத்து: மத்திய அமைச்சர் பிரதான்- வரவேற்கத்தக்கது. எரிவாயு குழாய் பாதை திட்டத்தையும் கைவிட வேண்டும்!

*திமுகவின் கடுமையான எதிர்ப்பால் தான் மீத்தேன்திட்டம் ரத்து: ஸ்டாலின்-பணத்தட்டுப்பாட்டால் சோகத்தில் உள்ள மக்களையும் சிரிக்க வைக்கும் கருத்து!
திமுகவின் எதிர்ப்பால் மீத்தேன் திட்டம் ரத்து:ஸ்டாலின்-ஆளை வெட்டுவர்.அதையும் மீறி பிழைத்தால் அதற்கு தாங்களே காரணம் என்பர் # விந்தை மனிதர்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 11, 2016
*திமுகவின் எதிர்ப்பால் மீத்தேன் திட்டம் ரத்து:ஸ்டாலின்-ஆளை வெட்டுவர்.அதையும் மீறி பிழைத்தால் அதற்கு தாங்களே காரணம் என்பர் # விந்தை மனிதர்கள்!
[Read this: காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி.. ஸ்டாலின் விளக்கம்..கடைசியில் ரத்து! மீத்தேன் திட்டம் கடந்து வந்த பாதை ]
*தமிழ்நாட்டில் புதியப் பாடத்திட்டம் அடுத்த ஆண்டும் வராது: அமைச்சர் பாண்டியராஜன் &அப்ப...மாணவர் சமுதாயம் முன்னேற வாய்ப்பே இல்லைன்னு சொல்லுங்க! இவ்வாறு டிவிட்டுகளை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.
இதேபோல நேற்று சில டிவிட்டுகளை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதையும் பாருங்கள்.
* சென்னையில் காவல்துறையினர் அவமானப்படுத்தியதால் திருநங்கை தற்கொலை: காவலர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்!
*தஞ்சாவூரில் பிடிபட்ட ரூ.8கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது: இந்த மாதிரி பணத்தை பொறி வச்சு பிடிங்க.அரசியல் கட்சிகள் கடத்தும் பணத்தை விட்டுடுங்க!
*ஜல்லிக்கட்டு குறித்த அரசின் ஆணைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: சட்டத் திருத்தம் செய்யாமல் மக்களை ஏமாற்றலாம், உச்சநீதிமன்றத்தை ஏமாற்ற முடியாதே!
*சென்னை வீட்டில் திருடன் ரூ.16 லட்சத்தை அப்படியே விட்டுச் சென்றான்: ரூ.1000 தாள் செல்லாது அறிவிப்பு திருடனை கூட திருத்தியிருக்குது பாருங்க!
இவ்வாறு ராமதாஸ் டிவிட்டுகளை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சி காலத்தில்தான் மீத்தேன் எரிவாயு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு, மீத்தேன் பாதிப்பை பற்றி அறியாமல் ஒப்பந்தம் செய்துவிட்டதாக ஸ்டாலின் கூறியிருந்தார். இதை மனதில் வைத்துதான் ராமதாஸ் கேலி செய்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications