தமிழக மீனவர்களை துன்புறுத்தும் இலங்கைக்கு படகுகள் பரிசா? - மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கொத்துக், கொத்தாக கைது செய்யும் இலங்கைக்கு படகுகளை பரிசளிப்பதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கை:

இலங்கை மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பேருக்கு மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்களை ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இலங்கையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா தானாக முன்வந்து படகுகள் உள்ளிட்ட உதவிகளை வாரி வழங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த இரண்டரை மாதங்களில் 99 மீனவர்களை கைது செய்ததுடன், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 82 படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. இந்திய மீனவர்களுக்கு இவ்வளவு துரோகம் செய்த இலங்கைக்கு மத்திய அரசு உதவி செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஒருவேளை இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய இந்திய அரசு முடிவு செய்தால், அதற்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்துவிட்டு அதன்பின்னர் இலங்கைக்கு இந்த உதவிகளை இந்தியா செய்திருந்தால் அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், 99 மீனவர்களை விடுதலை செய்வதாக கூறிய இலங்கை அரசு, அந்த முடிவை மாற்றிக் கொண்டு அனைத்து மீனவர்களின் சிறைக்காவலையும் நீட்டித்தது.
இப்படிப்பட்ட இலங்கைக்கு உதவி வழங்குவது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அவமானம் அல்லவா? இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள் முல்லைத்தீவில் உள்ள தமிழர்களுக்குத் தான் வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது குறித்து ஒப்பந்தத்திலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த காலங்களில் தமிழர்களை காட்டி இந்தியாவிடம் பெற்ற உதவிகளை சிங்களர்களுக்கு இலங்கை அரசு வழங்கிய நிகழ்வுகள் ஏராளமாக நடந்திருக்கின்றன. அந்த தவறை மீண்டும் இந்தியா செய்யக் கூடாது. இலங்கையிலுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன் படகுகளையும் விடுவித்தால் தான் இலங்கைக்கு உதவி செய்வது குறித்து சிந்திக்க வேண்டும். அதுவரை இலங்கைக்கு எந்தவித உதவிகளையும் இந்தியா செய்யக்கூடாது; படகு தருவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications