ரேசன் கடைகளில் குடும்பத்திற்கு 2 கிலோ பருப்பு வழங்குக: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
நியாய விலைக்கடைகள் மூலம் குடும்பத்திற்குத் தலா 2 கிலோ பருப்பு வழங்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் தமிழக அரசு உறங்குவது கண்டிக்கத்தக்கது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை உயர்வால் பல உணவகங்களில் சாம்பார் பறிமாறப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இட்லி, வடைகள், சாப்பாடு ஆகியவற்றின் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக எண்ணெய் வகைகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இவ்விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பருப்பு வகைகளின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சுமையிலிருந்து மக்களைக் காக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. எனவே,வெளிச்சந்தையில் பருப்பு விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் தலா 2 கிலோ துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு வழங்க அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, மலிவு விலை பருப்பு வகைகள் விற்பனைத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications