ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி - விரைவில் பிடிப்போம் எனத் தகவல்
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் வருகிற 24 ஆம் தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி திருச்சி சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மதுரை ஹைகோர்ட் கெடு விதித்துள்ளது. கெடு முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திருச்சி சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையிலான 12 இன்ஸ்பெக்டர்களை கொண்ட டீம் தனித்தனியே பிரிந்து சென்று வெவ்வேறு இடங்களில் ரகசியமாக விசாரணை நடத்தியது.

கடந்த 2012 மார்ச் 29 ஆம் தேதி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அரசியல் பகை, கிரானைட் தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் மோதல், கட்டப்பஞ்சாயத்து, பெண் பிரச்சனை என விசாரணை நடந்தது. இதில் கொலைக்கான பின்னணியை கண்டுபிடித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் கொலையாளிகளை நெருங்கி வருகின்றனர். 10 முக்கிய பிரமுகர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சந்தேகப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு 2012 மார்ச் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 5 நாட்கள் திருச்சியில் முகாமிட்டிருந்த பிரபல தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், ரவுடிகள், கூலிப்படைகள் பற்றிய விபரம் திரட்டப்பட்டது.
இதில் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பிரபல ரவுடி மற்றும் கூலிப்படை திருச்சியில் தங்கியிருந்தது பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. இதில் தேசிய கட்சி அரசியல் பிரமுகர் தொழில் ரீதியான பிரச்சனைக்காக தங்கியிருந்த பிரமுகர் பற்றிய விபரமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் கிடைத்துள்ளது. இதில் அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது விசாரணை விபரம் அனைத்தையும் ரகசியமாக வைத்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்படுகிறது.
ராமஜெயம் கொலை வழக்கை திசை திருப்புவதற்காக சிலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதும் அது கொலையாளிகளை இதுநாள் வரை தப்ப உதவியதும் தெரிய வந்தது. தங்களது விசாரணையில் இவற்றையெல்லாம் கண்டுபிடித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை குற்றவாளியை நெருங்கி விட்டனர். எனவே விரைவில் குற்றவாளிகள் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications