திருச்சியில் களம் இறங்கும் மகளிர் தலைவிகள்- கலக்கத்தில் 'தலைவர்கள்'!
திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளின் பெண் பிரமுகர்கள் ஒட்டுமொத்தமாக களம் இறக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பெண் படைக்கு முன்பு எப்படி சமாளிப்பது என்ற கவலையில் இப்போதே பல தலைவர்கள் டென்ஷனாக காணப்படுகிறார்களாம்.
இந்த பெண் பிரமுகர்கள் வரிசையில் முக்கியமானவராக கொல்லப்பட்ட ராமஜெயத்தின் மனைவி உருவெடுத்துள்ளார்.

சீட் ப்ளீஸ்
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியிலும் முன்னணி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சீட் கேட்டு தலைமைக்கு விண்ப்பித்துள்ளனர்.

திருச்சியில் பெண்கள் படை
இந்த நிலையில், திருச்சி தொகுதியில் முன்னணி அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களையே களம் இறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

சாருபாலா முதல் ராமெஜயம் மனைவி வரை
காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானும், பாஜகவில் லலிதா குமாரமங்கலமும், மதிமுக சார்பில் ரொக்கையாவும் , அதிமுக சார்பில் தமிழரசி என்பவரும், திமுக சார்பில் மறைந்த ராமஜெயம் மனைவியையும் நிறுத்த அக் கட்சிகளின் தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக வருகின்றது.

காய் நகர்த்தியவர்கள் .. பதட்டத்தில்
இதனால், தொகுதி நமக்குத் தான் என கணக்கு போட்டு, காய் நகர்த்தி வரும் ஆண் வேடபாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

சென்னையில் முகாமிட்டு
இதன் காரணமாக, பல முன்னணி நிர்வாகிகளும், தலைவர்களும் இப்போது முதலே சென்னையில் முகாமிட்டு சீட்டை எப்படியாவது ஆண்களுக்காக பெற்று விட முயற்சித்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications