ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விவரம்!
ராமநாதபுரம்:
எம்.மணிகண்டன். எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்து, அறுவைச் சிகிச்சை நிபுணராக உள்ள இவர், மதுரை அண்ணா நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். தந்தை பெயர், செ.முருகேசன். அதிமுகவில் ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவராக இருந்து வருகிறார். மாநில மருத்துவ அணியின் துணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். ராமநாதபுரம்தான் இவரது சொந்த ஊர்.
திருவாடானை:
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில், நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார். 1969ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்த கருணாசின், தந்தை பெயர், சேது. பி.ஏ படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். முக்குலத்தோர் புலி படை நிறுவனரான இவர், அதிமுக கூட்டணி சார்பில் கமிளறக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி பெயர் கிரேஸ், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர். சென்னையில் வசிக்கிறார்.
பரமக்குடி:
இந்த தொகுதியில், சித்திரன் மற்றும் பொன்னம்மாள் என்பவர்களது மகனான, டாக்டர் எஸ்.முத்தையா போட்டியிடுகிறார். 27.07.1961 தேதியில் பிறந்தார். பரமக்குடி.தான் சொந்த ஊர். சாந்தி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் தொகுதியில், எம்.கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார். 1976ம் ஆண்டு மே 28ம் தேதி பிறந்த கீர்த்திகா, எம்.ஏ (அரசியல் அறிவியல்) படித்துள்ளார். இப்போதும், இதற்கு முன்பு ஒருமுறையும் ஆக மொத்தம், இருமுறை பரமக்குடி நகர் மன்ற தலைவர் பதவி வகித்தவர்., தேனி மாவட்டம் உத்தமபாளையம் சொந்த ஊர். தினகரத் தேவர் மற்றும் திலகம் ஆகியோரின் மகள் இவர். கணவர் பெயர், முனியசாமி, கீழத்தூவலைச் சேர்ந்தவர்.
கணவரின் கட்சி பொறுப்பு எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர். 14 வயதில் அச்சரம் என்ற மகளும்,7 வயதில் அச்சை என்ற மகனும் உள்ளனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications