இன்னிக்கு மழை வரும்னு ரமணன் சொல்றார்... வருமா?
சென்னை: இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
கோடை தொடங்கிய சில தினங்களிலேயே கடுமையான வெய்யில் தாக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் கடந்த 4 நாட்களாக வங்கக் கடல் காற்றும், அரபிக் கடல் காற்றும் சேர்ந்து சாதமாக வீசுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், "தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
மேலும் லட்சத்தீவுக்கு மேல் மேலடுக்கில் சுழற்சி உள்ளது. இப்படி 2 காரணங்களால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இன்றும் (வெள்ளிக் கிழமை) மழை பெய்யும். உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்," என்றார்.
ரமணன் சொன்னபடி மழை வருமா? பார்க்கலாம்!
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications