ராமநாதபுரத்தில் திடீர்னு பரபரப்பு.. நடுக்கடலில் குவியல் குவியலா தங்க பார்சல்கள்.. சிக்கும் பிரபலங்கள்
ராமநாதபுரம்: கடத்தல்காரர்கள் நடுக்கடலில் தங்கத்தை வீசியெறிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது ராமநாதபுரத்தில்?
வான்வழியில் கடத்தல் சம்பவங்கள் நடப்பதை போலவே, கடல்வழியிலும் கடத்தல்கள் நடக்கவே செய்கின்றன.. குறிப்பாக, ராமேஸ்வரம் கடல் வழியாக, தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
கடத்தல்காரர்கள்: இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில், கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்... மேலும், கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு, நேரடியாகவே ரோந்து படகில் சென்று ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து, ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகளும், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பலில் சம்பந்தப்பட்ட ஸ்பாட்டுக்கு விரைந்து சென்றனர்.
மண்டபம் பகுதி: அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் நடுவில் உள்ள கடல்பகுதியில், ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது... அதை நிறுத்துமாறு அதிகாரிகள் வார்னிங் தந்தனர்.. ஆனால், அதிகாரிகளை பார்த்ததுமே நாட்டுப்படகில் இருந்தவர்கள் உஷார் ஆகிவிட்டனர்.. உடனே, ஏதோ ஒரு பொருளை கடலில் தூக்கி தூக்கி வீசியெறிந்துள்ளனர்..
சிறிது நேரத்தில், மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர், அந்த நாட்டுப்படகிற்குள் ஏறி, அதிரடியாக சோதனை நடத்தினர்.. அந்த படகில் வேதாளை பகுதியை சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் இருந்தனர்.. அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று, தனித்தனியாக விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்..
அவர்கள் கடலில் வீசியது தங்கக்கட்டிகளா? அல்லது வேறு ஏதேனும் பொருட்களா? என்பது குறித்த விசாரணை ஆரம்பமானது.
ரோந்து பணி: இதனிடையே, நேற்று நள்ளிரவில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்றிருக்கிறார்கள்.. அப்போது, இலங்கை பகுதியில் இருந்து, இன்னொரு நாட்டுபடகு வருவது தெரியவந்தது... அந்த படகை போலீசார் மடக்கி, அதில் வந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்... அப்போதுதான், அவர்கள் தங்கத்தை கடத்தி வந்தது அம்பலமானது..
இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை இவர்கள் கடத்தி வந்திருக்கிறார்கள்.. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், தங்கத்தை கடத்தி வந்த 2 பேரையும் அங்கேயே போலீசார் கைது செய்தனர்... அந்த படகையும் பறிமுதல் செய்தனர்.. இதே போல், முன்னதாக, தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக 3 பேர் வந்த படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரோந்து படகை பார்த்ததுமே, படகில் இருந்த 3 பேரும் படகை நிறுத்தாமல் சென்றார்களாம்.. அதற்கு பிறகுதான் கடலோர காவல்படையினர் கடலிலேயே விரட்டி விடித்து பிடித்துள்ளனர்.. அவர்கள் வந்த படகிற்கு பதிவு எண் கூட இல்லையாம்.. இதையடுத்து, அவர்கள் நடுக்கடலில் வீசிய பார்சல்கள் தங்க கட்டிகள் என்று தெரியவந்துள்ளது.. அவர்கள் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும்... இதனால் ஆழ்கடல் நீச்சல் விரர்கள் 8 பேர் மற்றும் முத்து எடுக்கும் தொழிலாளர்கள் 5 பேர் உதவியுடன் தேடும் பணி ஆரம்பமானது.
பரபரப்பு : நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் இருந்த பார்சலை இந்திய கடலோர படையினர் மீட்டுள்ளனர்.. இதன் மதிப்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவமும், நடுக்கடலில் தங்கத்தை கொட்டிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications