தமிழக பாஜகவின் அடுத்த தலைவராகிறாரா து. குப்புராமு? சென்னை கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு?
சென்னை: தமிழக பாஜக தலைவர் து. குப்புராமு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. எனினும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் அப்பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ரேஸில் இருந்தனர். அப்போது ரஜினிகாந்த் கூட அப்பதவிக்கு வரலாம் என சொல்லப்பட்டது.

தலைவராகிறார்
மேலும் டெல்லியில் தமாகா தலைவர் ஜி கே வாசன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதனால் தனது தமாகாவை பாஜகவுடன் இணைத்துவிட்டு தமிழக பாஜக தலைவராகிறார் வாசன் என செய்திகள் வெளியாகின.

குப்புராமு தேர்வு
இந்த நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புராமுவை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம்
குப்புராமு 1986 முகல் 2006 ஆம் ஆண்டு வரை பட்டினம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவராக 3 முறை பதவி வகித்தவர். பாஜக துணை தலைவராகவும் , விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில தலைவராகவும் இருந்துள்ளார். 2014-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டவர் குப்புராமு.

செய்தியாளர்கள் சந்திப்பு
வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவான தலைவரை பாஜக நியமிக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி!












Click it and Unblock the Notifications