வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையமா... அரசே விமானத்தில் அழைத்து செல்ல ராமதாஸ் வலியுறுத்தல்!
வெளிமாநிலத்தில் நீர் தேர்வு மையம் அமைத்தால், மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டால், அவர்களை விமானம் மூலம் அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்குவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அங்குதான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
— Dr S RAMADOSS (@drramadoss) May 3, 2018
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சரி தான் என்றும் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் ராஜஸ்தானில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications