ராமேஸ்வரத்தில் பயங்கர சூறாவளி- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனால் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடல் அலைகள் மிக உயரத்தில் எழுந்து பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
பாம்பன் பாலத்தில்,ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கோவிலுக்கும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், சூறாவளி காற்றும் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் தூரல் மழையே பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications