சுவாதி கொலை வழக்கு.... ராம்குமாரின் சிறைக்காவல் மேலும் நீட்டிப்பு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி. இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கனவே, ராம்குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்..
இதனிடையே நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அழைத்து வரப்பட்டார் ராம்குமார். அங்கு அவருக்கு தொண்டை காயத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடவே, ராம்குமாரின் ரத்தமாதிரியும் சேகரிக்கப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை அவரது வழக்கறிஞர் ராமராஜ் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று எழும்பூர் 14-வது கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் ராம்குமாரின் சிறைக்காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ராம்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications