சுவாதி கொலை வழக்கு.. ராம்குமாரை குற்றவாளியாக்க போலீஸ் முயற்சி - வக்கீல் ராம்ராஜ் பேட்டி
சென்னை: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை குற்றவாளியாக மாற்ற காவல் துறை முயற்சி செய்து வருவதாக வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

ஆனால் ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் மூலம் கொலையாளியை அடையாளம் காட்ட புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு இன்று நடந்தது.
இதையடுத்து புழல் மத்திய சிறையில் உள்ள ராம்குமாரை, வழக்கறிஞர் ராம்ராஜ் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம்ராஜ் கூறுகையில், இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று ராம்குமார் கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், ராம்குமார் மன அழுத்தத்தில் இருப்பதால் அவருக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும்.
ராம்குமாரின் புகைப்படத்தை வெளியிட்ட பின் அடையாள அணிவகுப்பு நடத்தியது சட்டவிரோதம் ராம்குமாரை சிக்க வைக்கும் ஒரே கண்ணோட்டத்துடன் காவல்துறை செயல்படுவதாகவும் அவரை குற்றவாளியாக மாற்றவும் காவல் துறை முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications