ராம்குமார் ஒரு "அக்யூஸ்ட்".. அப்படித்தான் பார்க்கனும்... ஜாதி சாயம் பூசக் கூடாது- எஸ்வி சேகர்
திருச்சி: ராம்குமார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட "அக்யூஸ்ட்". அவரை அதுபோல மட்டுமே பார்க்க வேண்டும். அவர் மீது ஜாதிச் சாயம் பூசக் கூடாது என்று நடிகர் எஸ்வி. சேகர் கூறியுள்ளார்.
சுவாதி கொலை தொடர்பாக பேஸ்புக்கில் முன்பு கமெண்ட் ஒன்றை பார்வர்ட் செய்து பரபரப்பைக் கிளப்பியவர்கள் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் எஸ்வி.சேகர் ஆகியோர். இந்த நிலையில் ராம்குமார் மரணம் தொடர்பாக ஒய்.ஜி. மகேந்திரன் இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. ஆனால் எஸ்வி சேகர் வாய் திறந்துள்ளார்.

திருச்சி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 30 வருடமாக கட்டுக்குள் இருந்த ஜாதியம் இப்போது மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளது. அதுவும் முன்பை விட வீரியமாக அது வந்துள்ளது. மக்கள் அக்யூஸ்டுகளை அக்யூஸ்டுகளாக மட்டுமே பார்க்க வேண்டும்.
ராம்குமார் ஒரு வழக்கி் குற்றம் சாட்டப்பட்ட அக்யூஸ்டு. அவரை அந்த அளவுக்கு மட்டுமே பார்க்க வேண்டும். அவருக்கு ஜாதிச் சாயம் எல்லாம் பூசக் கூடாது.
சமூககம் சீர்குலைந்து போனதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சினிமாவுக்கும் இதில் முக்கியப் பங்கு உள்ளது. இது இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பதில் சந்தேகமே இல்லை என்றார் சேகர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications