கடையல்லூர்: ரம்ஜான் நோன்பு பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மூன்று இடங்களில் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்ப ட்டு இருந்தது.
கடையல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் குளித்துவிட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலை கடையநல்லூர் காயிதேமில்லத் திடலே நோக்கி வரத் தொடங்கினர்.

6000 பேர் தொழுகை
சரியாக 6.45 மணியளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி அவர்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு பெருநாள் உரையாற்றினார்.
இதில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

தவ்ஹீத் ஜமாஅத்
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் மற்றும் பேட்டை கிளை நிர்வாகிகள் அய்யூப் கான், ஹாஜா மைதீன், ஹைதர்அலி, முஹம்மது அப்பாஸ், குறிச்சி சுலைமான் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

தென்காசியில் ரம்ஜான்
தென்காசி கோட்டாட்சியர் ரெகோபெயாம் உத்தரவின் பெயரில், தென்காசி வட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில், புளியங்குடி சரக துணை கண்காணிப்பாளர் வானுமாமலை மேற்பார்வையில், கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

குப்தா பேருரை
இது போன்று ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் மாவட்ட செயலாளர் பைசல் அவர்களும், மக்கா நகர் தவ்ஹீத் திடலில் சதாம் உசைன் அவர்களும் பெருநாள் தொழுகையும் அதை தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications