Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் ரோட்டில் விறுவிறு "சேஸிங்".. அம்மா, மகளை காரில் கடத்திய மேனேஜர்.. பரபரத்த ராணிப்பேட்டை

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: தாய் - மகள் இருவரையும் கடத்தி வைத்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இதையடுத்து, ராணிப்பேட்டை போலீசார் மேற்கொண்ட அதிரடி விசாரணையில், மொத்த கும்பலும் கைதாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் அல்தாப் தாசிப் - சப்ரின் பேகம் தம்பதியினர்.. இவர்களது மகள் அல்வினா மரியம்.. அல்தாசிப் தாசிப் மீது மோசடி புகார் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

ranipet ranipettai vellore

பண மோசடி: செய்யாறில் தனியார் நிதிநிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு திட்டம், மளிகை சாமான்கள் வழங்கும் திட்டங்களை நடத்தி அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறாராம் அல்தாசிப் தாசிப்.. திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தற்சமயம், அல்தாப் தாசிப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதே நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தவர் வசந்தகுமார்.. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர்.. அல்தாப் தாசிப் குடும்பத்தினர் எங்காவது வெளியில் செல்ல வேண்டியிருந்தால், வசந்தகுமார் அவர்களை காரில் அழைத்து சென்று வருவாராம்.

ranipet ranipettai vellore

வேலூர் சாலை: இந்நிலையில், நேற்றைய தினமும் சப்ரின்பேகம், மற்றும் அவரது மகள் அல்வினா மரியம் ஆகிய இருவரையும் சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்கு காரில் அழைத்து செல்வதற்காக வசந்தகுமார் வந்தார். தாயும் - மகளும் காரில் ஏறியதுமே, திடீரென வேலூர் நோக்கி காரில் பறந்தார் வசந்தகுமார்.. அத்துடன், தன்னுடைய நண்பர்களையும் உடனடியாக வரவழைத்து, தாய் - மகள் இருவரையும் கடத்தினார்.

பிறகு, சப்ரின் பேகத்தின் அம்மா, ஹயாத்தின் பேகத்துக்கு வாட்ஸ் அப் போன் செய்த வசந்தகுமார், தாயும், மகளும் சிறைபிடித்துள்ளதை கூறி, ரூ.1 கோடி வரை பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ந்த ஹயாத் பேகம், 1 கோடி பணம் தர முடியாது என்று கூறியிருக்கிறார்..

பணம் கேட்டு மிரட்டல்: அப்படியானால், ரூ.50 லட்சம் தருமாறும், அதில் முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாயை உடனடியாக தரவேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார். இதைக்கேட்டு பதறிப்போன ஹயாத்தின் பேகம் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

உடனே போலீசாரின் அறிவுரைப்படி, கடத்தல் கும்பல் கேட்ட பணத்தை தர தயாராக இருப்பதாகவும், அதை வந்து ராணிப்பேட்டையில் வாங்கிக் கொள்ளும்படியும் ஹயாத் பேகம் சொன்னார்.. இதைக்கேட்டதும், கடத்தல் கும்பல் ராணிப்பேட்டைக்கு பறந்த வந்தது.. அப்போது ராணிப்பேட்டை போலீசார், கடத்தல் கும்பலை சினிமா பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

தாய் மகள் மீட்பு: அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கொண்ட கும்பலையும் கைது செய்தனர்.. அவர்கள் அனைவரிடம் தற்போது விசாரணை நடக்கிறது.. கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.. இதனிடையே, ஒரு ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய், மகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+