அரிய வகை ஆமை பதுக்கல்… பாதுகாப்பு குழும போலீசார் அதிரடி பறிமுதல்
தூத்துக்குடியில் அரிய வகை ஆமை வகைகள் பதுக்கப்பட்டிருந்தது. அதனை பாதுகாப்பு குழும போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி: உணவுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிய வகை ஆமையை பாதுகாப்பு குழு போலீசார் பறிமுதல் செய்து கடலில் விட்டனர். இந்த சம்பவம் துத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பாத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்திற்கு பின்பகுதியில் சிலர் கடல் ஆமைகளை பிடித்து பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தூத்துக்குடி கடலோர குழும பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு முள்வேலியின் உள்ளே இரண்டு கடல் ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆமைகளை வனத்துறையினரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் மீட்டு கடற்கரை பகுதிக்கு சென்று பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
இந்த ஆமைகள் ஆலிவ் எனப்படும் அரிய வகையை சேர்ந்த ஆமைகள் ஆகும். இதில் ஒரு ஆமை சுமார் 10 கிலோ எடையும், மற்றொரு ஆமை 15 கிலோ எடையும் இருந்தது. இந்த ஆமைகளை கடலில் இருந்து பிடித்து உணவுக்காக மர்ம நபர்கள் பதுக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications