இனிமே "இராசாசி" கிடையாது... "இராஜாஜி"க்கு மாறுகிறது மதுரை அரசு மருத்துவமனையின் பெயர்!
மதுரை இராசாசி மருத்துவமனை இனி இராஜாஜி மருத்துவமனையாகிறது.
Recommended Video

மதுரை: மதுரை இராசாசி மருத்துவமனை இனி இராஜாஜி மருத்துவமனை என்றே குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை டி.வி.எஸ். நகரை சேர்ந்த வக்கீல் ஆர்.லெட்சுமிநாராயணன். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை டீன் உள்ளிட்ட பலரிடமும், மனு ஒன்றினை கொடுக்க ஆரம்பித்தார்.

அதில், மதுரை அரசு மருத்துவமனையில் 4 இடங்களில் உள்ள பெயர் பலகைகளில் 'இராசாசி' என்று இருப்பதாகவும், அதனை மாற்றி 'இராஜாஜி' என்றே வைக்க வேண்டும். மேலும் இராஜாஜி பிறந்த தொரப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் வைத்திருக்கும் பெயர் பலகையில் கூட இராஜாஜி என்றே எழுதியுள்ளது. எனவே அனைத்து இடங்களிலும் அவரது பெயரை இராஜாஜி என்றே குறிப்பிட வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார்.
இந்நிலையில் அரசு மருத்துவமனை பெயரில் இராசாசி என்றிருப்பதை இராஜாஜி என மாற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் பொதுப்பணி செயற்பொறியாளருக்கு இதனை கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையின் பெயர் பலகையில் திருத்தம் செய்து அரசு இராஜாஜி மருத்துவமனை என்று சரியான பெயர் பலகை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் அவர் வலிறுத்தியுள்ளார். இதன்மூலம் இராசாசி என்ற பெயர் ஒன்றரை வருட போராட்டத்திற்கு பின்னர் இராஜாஜி என்றே மாற்றப்பட உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications