மருத்துவ மனையில்நோயாளியை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ் எஸ்.ஐ.சஸ்பெண்ட்
ராசிபுரம்: அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் , பிற்பட்டோர் காலனியில் வசிப்பவர் குப்புசாமி மகன் செந்தில் (31) சலவை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 8.30 மணிக்கு இவரது அம்மா சந்திராவைச் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது செந்திலுக்கும், அவரது தம்பி காமராஜ் என்பவருக்கும், குடும்ப பிரச்னை தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது. அது முற்றி இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இந்த சண்டையில் செந்தில் மண்டை உடைந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது. இதையடுத்து அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து விசாரணை நடத்த, ராசிபுரம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.இராஜேந்திரன், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். விசாரணை நடத்திக் கொண்டிருந்த அவர் திடீரென செந்திலை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்து அடித்துள்ளார். இதில் செந்தில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து, சிறப்பு எஸ்.ஐ. இராஜேந்திரனை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இந்த கொடுமையான சம்பவம் குறித்து, தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த எஸ்.பி.ராஜன் நியமிக்கப்பட்டார். அவர் ராசிபுரம் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையிலிருந்த செந்திலிடம் விசாரணை நடத்தினார். பிறகு, டி.எஸ்.பி., ராஜன் அளித்த அறிக்கைப்படி, நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணம்மாள், சிறப்பு எஸ்.ஐ. ராஜேந்திரனை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications