தேனியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - பறிமுதல் - வீடியோ
தேனியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தியபோது வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
தேனி: தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு லாரி மூலம் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் கைப்பற்றினர்.
தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் 1400 கிலோ அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட இருந்தது தெரிந்தது. அதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடப்பதில்லை என்ற புகார் எழுந்து வரும் நிலையில் அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications