1000 டன் ரேசன் பொருட்கள் வெள்ளத்தில் நாசம் - ஒன்றுமில்லாமல் போன ஏழைகளின் ஒரு வேளை சோறு!
சென்னை: தமிழகத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளும், மால்களும் பல்கிப் பெருகி ஹைடெக் ஸ்டைலில் அரிசி, பருப்பினை விற்றாலும் அடித்தட்டு மக்களுக்கும், பெரும்பாலான மிடில்கிளாஸ் மக்களும் மாதாமாதம் கைகளில் பைகளை தூக்கிக் கொண்டு அரிசிக்கும், சர்க்கரைக்கும் வரிசையில் நிற்பது ரேசன் கடைகளில்தான்.
அரசால் நியாய விலைக்கடை எனக் கூறப்படும் இந்த ரேசன் கடைகளில் பெரும்பாலும் காதில் ஒலிக்கும் பதில் "இன்னைக்கு அரிசி இல்லைமா ரெண்டு நாள் கழிச்சு வாங்க" என்பதுதான். ஆனாலும், ஏழைகளில் வீட்டில் உலை கொதிக்க ரேசன் அரிசிதான் காரணம்.
இரண்டு அரசுகளுமே 1 ரூபாய் அரிசி, இலவச அரிசி எல்லாம் வாரி வழங்கினார்கள்தான். ஆனால், அரசு என்பது அந்தந்த நேரத்து தனிமனிதர்கள்தான் என்பது போல ரேசன் கடை ஊழியர்கள் மனது வைத்தால் மட்டுமே பை நிரம்பும் நிலை.

வயிற்றில் அடித்தது வெள்ளமா?:
இந்நிலையில்தான் சென்னை வெள்ளம் கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச அரிசி, பருப்பிற்கும் ஆப்பு வைத்து சென்று விட்டது. சேர்த்து வைத்து, சேர்த்து ரேசன் கடைக்காரர்கள் பாதுகாத்த உணவுப் பொருட்கள் எல்லாம் இன்று அரை வயிறு கஞ்சி குடிக்கும் ஏழை மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது.

வெளியில் கொட்டும் அவலம்:
அடித்துப் போன வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான டன் ரேசன் பொருட்கள் நாசமாகி, கடைக்காரர்கள் புழுத்துப் போன அவற்றை வெளியில் கொட்டி வருகின்றனர்.

விற்பனை அமோகம்:
ஒருபுறம் அரசிற்கே தெரியாமல் கள்ளச் சந்தையில் ரேசன் பொருட்கள் விற்பனை அமோகம் என்றால் மிஞ்சிப் போய் மக்களுக்கு கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்களும் இந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது கொடுமையிலும் கொடுமை.

சோறு போடும் ரேசன் கடைகள்:
வெள்ள நிவாரணமாய் 5000, 10000 கோடி வந்தாலும் வழங்கப்படும் ரூ.5000 நிவாரணம் வாடகைக்கே பத்தாது என்ற நிலையில் மேல்தட்டு மக்களும் ரேசன் கடையை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நியாய விலைக்கடைகளா?:
இந்நிலையில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஒவ்வொரு டன் அரிசி, பருப்பும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பட்டினி நிறைந்ததாக மாற்றியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. இனியேனும் திருந்தி பதுக்கி, பதுக்கி வைக்காமல் பகிர்ந்து கொடுத்தால் மட்டுமே ரேசன் கடைகள் உண்மையான நியாய விலைக்கடைகளாய் இருக்கும்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications