கோவையில் ரம்ஜான்.. மசூதிகள், ஜமாத்துகளில் சிறப்பு தொழுகை.. கட்டித் தழுவி வாழ்த்துக்கள் பரிமாற்றம்
கோவையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக கோவையிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் ஜமாத்துகளில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவை உக்கடம் வின்செண்ட் சாலை பகுதியில் உள்ள நல்லாயன் பள்ளியில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருவரை ஓருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதே போன்று பூமார்கெட், போத்தனூர்,மேட்டுபாளையம் சாலை என பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகளானது நடைபெற்றது. இந்த தொழுகை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் இஸ்லாமியர்கள் சக இஸ்லாமியர்களுடமும் பிற மதத்தினருடனும் இனிப்புகளையும், பிரியாணியையும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications