விறுவிறுப்பாக நடந்த மறு வாக்குப்பதிவு- சேலம் 76 % நாமக்கல் 84%
சேலம்: நாமக்கல் தொகுதிகளுக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நிறைவு பெற்ற மாலை 6 மணி நிலவரப்படி 84.6 சதவீதமும், சேலம் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் 76.81 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 24ஆம் தேதியன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, சேலம் தொகுதியில் செங்கலணை சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.

இதேபோல், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட கோட்டப்பாளையம் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் ஏற்கனவே பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஏற்கனவே நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால், இன்று வலது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மழை ஏற்பட்டாலும் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டாமல் இருக்க போதிய முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
இந்த தேர்தலில் மாலை 6 மணி இறுதி நிலவரப்படி நாமக்கல் தொகுதிக்குட்பட்ட கோட்டப்பாளையம் வாக்குச்சாவடியில் 84.6 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இதேபோல் சேலத்தில் புற்றுமாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள 213வது வாக்குச்சாவடியில் நடந்து வரும் மறுவாக்குப்பதிவில் 76.81சதவீதம் வாக்குகள் பதிவாகின. வெயில் இல்லாத காரணத்தால் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துச் சென்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications