நடிகை கே.ஆர். விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது
கோவை: பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் ஹேமலதா(47). கணவரை பிரிந்த அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். அவரின் 2 மகன்களும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கதிர்வேல்(41) என்பவர் ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்குவது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் நிலம் வாங்குவது தொடர்பாக அவர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஹேமலதா தனியாக வசிப்பதை தெரிந்து கொண்ட கதிர்வேல் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அடிக்கடி ஹேமலதாவுக்கு போன் செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்துள்ளார். கே.ஆர். விஜயா வீட்டு மருமகன் ஆக வேண்டும். நீங்கள் சரி என்றால் என் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன். நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களின் சித்தி மகளையாவது திருமணம் செய்ய விரும்புகிறேன் என கதிர்வேல் தெரிவித்துள்ளார். இதை கண்டித்த ஹேமலதாவை அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹேமலதா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கதிர்வேல் மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கதிர்வேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications